கொட்டப் போகுது மழை; நீங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இதுதான்; மறக்க வேண்டாம்
அக்டோபர் மாதத்தில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மக்கள் மழையை எதிர்கொள்ள என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
Chennai Rain
கொட்டப்போகுது மழை
காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. வறண்ட பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படுகிறது. பசுமையான நகரம் காய்ந்து கிடக்கிறது. வெயில் காலத்தில் மழையும், மழை காலத்தில் வெயிலும் மாற்றி மாற்றி நிகழ்கிறது. பல ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் செப்டம்பர் மாதம் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்தது. இந்தநிலையில் தான் கடந்த சில ஆண்டுகாலமாகவே ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அளவானது ஒரே நாளில் கொண்டி தீர்த்து விடுகிறது. இதனால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கலெக்டர், எஸ்.பிக்களுக்கு பறந்த முக்கிய கடிதம்- உடனே இதனை செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவு
Tamilnadu rain
சென்னைக்கு ரெட் அலர்ட்
பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பல வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. எனவே டிசம்பர் மாதம் என்றாலே சென்னை மக்களுக்கு அச்சம் தான். அந்த வகையில் ஒவெவொரு ஆண்டும் மழைக்காலத்தில் டிசம்பர் மாதத்தை நினைத்து அச்சம் அடைவார்கள். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னோட்டமாக அக்டோபர் மாதமே மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே தற்போதே மக்கள் மழையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ஆரஞ்ச் மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. .
Tamilnadu rain
எனவே இந்த மழைக்காலத்தில் மக்கள் என்ன.? என்ன செய்யலாம். என்னவெல்லாம் செய்யகூடாது என்பது தற்போது பார்க்கலாம்
வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைப்பது,
பேட்டரி சார்ஜ் செய்து வைப்பது,
குழந்தைகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரை, தீன் பண்டங்கள் வாங்கி வைப்பது,
செல் போன் சார்ஜ் செய்வது, லேப் டாப், பவர் பேங்க் சார்ஜ் செய்ய வேண்டும்
அத்தியாவசிய தேவையான மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டியை பத்திரமாக வைக்க வேண்டும்
Chennai Rain updates
அடுக்குமாடிகளில் இருப்பவர்கள் தண்ணீர் சேமித்து வைத்திருக்க வேண்டும்
கன மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மோட்டார் போட முடியாது எனவே லிப்ட் வேலை செய்யாத நிலையில் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினமாகும்.
ஆதார், ரேஷன் கார்டு, கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாலீத்தின் கவரில் பத்திரமாக வைக்க வேண்டும்.
வீட்டிலுள்ள பெயர்ந்த ஓடுகளை கிமென்ட் கொண்டு சரிசெய்யவும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை சீரமைக்கவும்.
வீட்டின் சுற்றுப்புறத்திலுள்ள, பழைய மரங்களை அகற்றவும், காற்றில் பறந்து செல்ல வாய்ப்புள்ள பெயர்ந்த செங்கல், ஒடுகள், குப்பைத்தொட்டிகள் பதாகைகள் முதலியவற்றை அகற்ற வேண்டும்.
Tamil Nadu Weather Updates
மண்ணெண்ணை நிரப்பிய அரிகென் விளக்கு. பேட்டரி டார்ச் விளக்கு மற்றும் சில உலர்ந்த பேட்டரிகளை கைவசம் வைத்திருங்கள்.
விளக்கு கம்பங்களிலிருந்து பிடிமானமின்றி தொங்கும் மின்சார வயர்களை தொடக்கூடாது.
பஸ்கள், கார்கள், லாரிகள் மற்றும் வண்டிகளை கவனமாக இயக்கவேண்டும்.
வெள்ளம், புயல் தொடர்பான வதந்திகளை நம்பக்கூடாது.
சீற்றமான உயர் அலைகளால் அடித்து செல்ல வாய்ப்புள்ள தாழ்வான கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் இருப்பின், விலைமதிப்பான மற்றும் முக்கியமான பொருட்களை மேல் தளத்தில் வைக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கென பிரத்யேக உணவு முறை தேவைபடின் அதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளவும்.