கலெக்டர், எஸ்.பிக்களுக்கு பறந்த முக்கிய கடிதம்- உடனே இதனை செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனே தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Chennai Rain
மாறிய காலநிலை- வாட்டி வதைக்கும் மழை , வெயில்
தமிழகத்தில் கடந்த எப்போதும் அக்டோபர் மாதம் இறுதியில் தான் தொடங்கும். ஆனால் கால நிலை மாற்றத்தின் காரணமாக வெயில் காலத்தில் மழையும், மழை காலத்தில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் , மே மாதங்களில் வெயில் உச்சபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது. வீட்டிற்குள் இருந்தாலும் அடுப்பு பக்கத்தில் இருப்பதி போல் அனல் காற்று வீசியது. இந்த வெயில் காலத்தை கடந்த மக்களுக்கு ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் அதிர்ச்சியை கொடுத்தது. .
Rains in AP
சென்னையை அச்சுறுத்தும் மழை
எனவே சென்னை மக்களுக்கு டிசம்பர் மாதத்தை நினைவுப்படுத்தியுள்ளது. அந்த அளவிற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.இதுவே அதிக கன மழைக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் இன்று படிப்படியாக தொடங்கும் மழை இன்று இரவு முதல் வெளுத்த வாங்கவுள்ளது. இதன் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
Tamilnadu rain
வட மாவட்டங்களில் அதீன மழை
மேலும் செப்டம்பர் மாதம் வெயில் குறைந்து குளுமையான வானிலை நிலவும் என எதிர்பார்த்த மக்களுக்கு பல ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த வெயிலாம் மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும். ஆனால் தற்போது பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு
மேலும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
எப்போது மழை தொடங்கும்.! இன்று அலுவலகம், பள்ளிக்கு செல்லலாமா.? வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்
தாழ்வான பகுதிகளை கண்காணிக்க உத்தரவு
மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.