திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இருக்கிறது வீரகநல்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி துலுக்கானம்மாள்(55). விவசாயியாக முருகேசன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனம் ஒன்றில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற சாலையின் எதிரே டிராக்டர் ஒன்று கரும்பு லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தது.

திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக முருகேசன் வந்த வாகனம் மீது டிராக்டர் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது துலுக்கானம்மாள் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. பலத்த காயமடைந்த அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகேசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தன் கண் முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பது கண்டு அவர் கதறி துடித்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியாகிய துலுக்கானம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் டிராக்டர் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!