இந்த காலத்துல இப்படி ஒருத்தவங்களா! ரூ.70 லட்சம் மதிப்பிலான வீட்டை கோயிலுக்கு தானமாக வழங்கிய தமிழக பெண் பக்தர்

ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய ஆந்திரா, தமிழகம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். 

tamilnadu female devotee donated a house to tirupati temple

தமிழகத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் 7O லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடுக்கு மாடி வீட்டை ஏழுமலையான் கோயிலுக்கு  நன்கொடையாக வழங்கியுள்ளார். 

ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய ஆந்திரா, தமிழகம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் 7O லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க;- Pragya Thakur:இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவருக்கு 1600 சதுர அடியில் புதிதாக இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சமாகும். இந்த சொத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார். 

இதற்கான சாவி மற்றும் சொத்து ஆவணங்களை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் சிறப்புப் பணியில் உள்ள சொத்துப் பாதுகாப்புத்துறை சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தார். 

இதையும் படிங்க;- Sabarimala: சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஐயப்பன் கோவிலுக்கு வந்தது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios