Pragya Thakur:இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு

இந்துக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களை தாக்க வருவோருக்கும், தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும் பதிலடி கொடுக்க அது பயன்படும் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Keep Sharp Weapons at Home, Says BJP MP Pragya Singh Thakur

இந்துக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களை தாக்க வருவோருக்கும், தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும் பதிலடி கொடுக்க அது பயன்படும் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்கூர். பெண் சந்நியாசியான பிரக்யா சிங் தாக்கூர் அவ்வப்போது இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

போபால் நகரில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகாவின் தென் மண்டல ஆண்டு பட்டமளிப்பு விழாவில் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

Keep Sharp Weapons at Home, Says BJP MP Pragya Singh Thakur

கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் அடக்குமுறை செய்பவர்களையும், பாவம் செய்பவர்களையும் ஒழித்துவிடுங்கள், இல்லை என்றால் அன்பின் உண்மையான விளக்கம் இங்கு நிலைக்காது என்று சந்நியாசி கூறுவார்கள். லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டிருப்போருக்கும் இதே வழியில்தான் பதில் அளி்க்க வேண்டும். லவ் ஜிஹாத் என்று அந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு பாரம்பரியம் இருக்கிறது, அவர்கள் லவ் ஜிஹாத்தை விரும்புகிறார்கள். இந்துக்களாகிய நாம் அன்பையும், கடவுளையும் விரும்புவோம். சந்நியாசி தனது கடவுளை விரும்புகிறார். 

 

லவ்ஜிஹாத் செய்பவர்களிடம் இருந்து உங்களை பெண் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், பெண் குழந்தைகளுக்கு சரியானவற்றை போதியுங்கள். இந்துத்துவாஆர்வலர்கள்கொல்லப்படுகிறார்கள.ஆதலால், இந்துக்கள் அனைவரும் சுயபாதுகாப்புக்காக தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள்

துபாயில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய 2வது நபருக்கு கொரோனா தொற்று

உங்கள் வீட்டில் ஆயுதங்களை பாதுகாப்பாக வையுங்கள். ஏதும் நடக்காவிட்டால், அந்த கத்தியை, ஆயுதத்தை வைத்து காய்கறி நறுக்குங்கள். ஆனால் கூர்மையாக வைத்திருங்கள். எந்தவிதமான சூழல் எழும் என யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது, உங்கள் வீட்டுக்குள் யாரேனும் நுழைந்து, உங்களைத் தாக்கினால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது உங்கள் உரிமை.

கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்காதீர்கள். உங்களுக்கான முதியோர் இல்லத்தை நீங்களே திறந்து வைக்கிறீர்கள். அங்கு பயிலும் உங்கள் குழந்தைகள், உங்களுடையவர்களாக இருக்கமாட்டார்கள், உங்கள் கலாச்சாரத்தில் இருக்கமாட்டார்கள். முதியோர் இல்லங்கள் உருவாவது, சுயநலமாகும். தினசரி வீட்டில் பூஜை செய்யுங்கள், தர்ம சாஸ்திரத்தை படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு கற்பித்திடுங்கள். நம்முடைய கலாச்சாரத்தையும் மதிப்புகளையும் குழந்தைகள் அறியட்டும்

இவ்வாறு பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்

 

பிரக்யா சிங் தாக்கூர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டகருத்தில் “ வெறுப்புப் பேச்சு. பிரக்யா தாக்கூர் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

KCR:தெலங்கானா முதல்வர் KCR-க்கு பின்னடைவு: BRS எம்எல்ஏக்களை பேரம்பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கர்நாடகத்தின் ஷிவமோகா காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவல்லா பிரக்யா சிங் தாக்கூர் குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். பிரக்யா மீது போலீஸார் ஐபிசி 153-ஏ, 153-பி, 268, 295-ஏ, 298, 504, 508, ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர் என பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios