KCR:தெலங்கானா முதல்வர் KCR-க்கு பின்னடைவு: BRS எம்எல்ஏக்களை பேரம்பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்
பாரதிய ராஷ்ட்ரிய சமிதி(BRS) கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தநிலையில் அந்த வழக்கை சிபிஐக்கு மற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாரதிய ராஷ்ட்ரிய சமிதி(BRS) கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தநிலையில் அந்த வழக்கை சிபிஐக்கு மற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிஆர்எஸ் எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு விசாரணையை உன்னிப்பாகக் கவனித்துவந்த முதல்வர் சந்திரசேகர் ராவ்வுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சற்று பின்னடைவாகும்.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க கடந்த செப்டம்பர் மாதம் முயற்சி நடந்தது.
இது குறித்து பிஆர்எஸ் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி அளித்த புகாரின் பெயரில், பண்ணை வீட்டுக்குச் சென்ர போலீஸார் 3 பேரைக் கைது செய்தனர். எம்எல்ஏ ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி அளிப்பதாகவும், அரசுக்கு எதிராக கலகம் செய்தால் கூடுதலாக கோடிகள் கொடுப்பதாகவும் பேரம் பேசப்பட்டது.
இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, திருப்பதியைச் சேர்ந்த சிம்மாயாஜி, ஹைதராபாத்தைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், தற்போது 3 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மாநில சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றி முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டார். சிறப்பு விசாரணைப் பிரிவினர், பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளரும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமான பிஎல் சந்தோஷிடம் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து சில வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு, டெல்லியிலிருந்து 3 ஏஜென்டுகள் வந்து பிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு விலைபேசினர் என்று பாஜகவை மறைமுகமாக சாடினார்.
இதையடுத்து, பாஜக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் “ சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரித்துவரும்போது, முதல்வர் கேசிஆர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவது விசாரணையில் குறுக்கிடுவது போன்றதாகும்.
ஆதலால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜகவை தேவையில்லாமல் முதல்வர் கேசிஆர் இழுக்கிறார். சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நியாயமற்ற முறையில் நடக்கிறது. ஆதலால் இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது பதவியில் இருக்கும் நீதிபதியை விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐ.சி.ஐ.சி.ஐ. கடன் மோசடி வழக்கு:வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் கைது:சிபிஐ அதிரடி
இந்தவழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் “ எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு முறையிடலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.