நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி... அரசின் அதிரடி முடிவால் மக்கள் அதிருப்தி!!
கொரோனா பரவல் எதிரொலியாக கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலத்திற்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாள பிரதமராக பதவியேற்றார் பிரசந்தா.. இந்திய பிரதமர் மோடி வாழ்த்து !!
முன்னதாக பெலகாவி சட்டமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோக், சுகாதார துறை அமைச்சர் சுதாகர், சுகாதார துறை ஆணையர் ரந்தீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகப்படியாக கூடுவதை தடுக்கவும் கொரோனா பரவலை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி
மேலும் மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் மற்றும் உள் அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் இந்த உத்தரவால் அம்மாநில உணவு விடுதி, பப் மற்றும் பார் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.