100 நாள் மது அருந்தவில்லை... 80,000 கடன் தீர்ந்தது... பேனர் வைத்துப் பாராட்டிய நண்பர்கள்!

100 நாள் மது அருந்தாமல் இருந்த  பூவிருந்தவல்லியைச் சேர்ந்த நபரை அவரது நண்பர்கள் பேர் வைத்துப் பாராட்டி இருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No alcohol for 100th day... Friends congratulate with a banner in Thiruvallur sgb

100 நாள் மது அருந்தாமல் இருந்த  பூவிருந்தவல்லியைச் சேர்ந்த நபரை அவரது நண்பர்கள் பேர் வைத்துப் பாராட்டி இருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் க.மு.சிவக்குமார். சாலையோரம் உணவுக் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் பல வருடங்களாக குடிக்கு அடிமையாக இருந்தார். போதைக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

குடும்பத்தை கவனிக்காமல் டாஸ்மாக் கடையே கதியாகக் கிடந்ததால், அன்றாடத் தேவைக்கே போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட நேர்ந்தது. இந்நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்தக் குடிப்பழக்கத்தை விடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர்களின் வலியுறுத்தலை ஏற்று மதுப்பழக்கத்தைக் கைவிடும் முயற்சியைத் தொடங்கினார் சிவக்குமார்.

QR கோடு மூலம் கலெக்‌ஷன் செய்யும் டிஜிட்டல் இந்தியாவின் பிச்சைக்காரர்! தேங்க் யூ மோடி ஜி!

No alcohol for 100th day... Friends congratulate with a banner in Thiruvallur sgb

சரக்கு பாட்டிலை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன் என்று உறுதியான முடிவுடன் இருந்த சிவக்குமார் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக குடிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், அவரது முயற்சியைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், அவரது நண்பர்கள் வித்தியாசமான பேனர் வைத்துப் பாராட்டியுள்ளனர்.

அலெக்ஸ் மற்றும் பூவை நண்பர்கள் இணைந்து வைத்திருக்கும் பேனரில், "தொழில் அதிபரும் தமிழ்நாடு காற்றாலை சங்கத் தலைவருமான திரு. க.மு.சிவக்குமார் அவர்கள் வெற்றிகரமாக 100வது நாள் மது அருந்தவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். "எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு என்றும் அந்த வாழ்த்து பேனரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள க.மு.சிவக்குமார், நூறு நாளாக மது அருந்தாமல் இருக்கிறேன். இதனால், 80 ஆயிரம் ரூபாய் கடனையும் அடைத்துவிட்டேன் என்று உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். மதுப்பழக்கம் என்பதும் ஒரு நோய்தான், அந்தக் குடிநோய்க்கு ஆளானவர்கள் முயற்சி செய்தால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார் க.மு.சிவக்குமார்.

அடேங்கப்பா! அருண் நேருவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வேட்புமனுவில் வெளியான விவரங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios