QR கோடு மூலம் கலெக்ஷன் செய்யும் டிஜிட்டல் இந்தியாவின் பிச்சைக்காரர்! தேங்க் யூ மோடி ஜி!
இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் கவுரவ் சோமானி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "இது ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணம்" என்றும் கூறினார்.
அசாமின் கவுஹாத்தியில் பார்வையற்ற பிச்சைக்காரர் ஒருவர் தனித்துவமான முறையில் பிச்சை எடுத்து சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ட்விட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தஷ்ரத் என்று அடையாளம் காணப்பட்ட பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதைக் காண முடிகிறது.
அவர் கழுத்தில் PhonePe QR குறியீடு கொண்ட கார்டு ஒன்றை அணிந்திருக்கிறார். பிச்சைக்காரர் காரில் இருக்கும் இரண்டு பேரை அணுகி பிச்சை கேட்க, அவர்களில் ஒருவர் அவருக்கு 10 ரூபாய் அனுப்புவதற்காக QR குறியீட்டை ஸ்கேன் செய்கிறார். பிச்சைக்காரர் தனது கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட அறிவிப்பைக் கேட்க வசதியாக, தனது தொலைபேசியை காதுக்கு அருகில் வைத்துள்ளார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் கவுரவ் சோமானி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "இது ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணம்" என்றும் கூறினார்.
Sonam Wangchuk: சோனம் வாங்சுக்கின் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏன்? அரசு செவிசாய்க்குமா?
"தொழில்நுட்பம் உண்மையில் எல்லையே இல்லாதது. சமூக-பொருளாதார நிலையிலும் கூட, தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பத்தின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்" என்றும் தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, பீகாரின் பெட்டியா ரயில் நிலையத்தில் 40 வயதான ராஜு படேல் என்ற பிச்சைக்காரர் தனது கழுத்தில் QR குறியீடு கொண்ட போர்டு ஒன்றை மாட்டிக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்பது சமூக வலைத்தளங்களில் பரவியது.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் சீடர் என்றும் சொல்லிக்கொள்பவர் ராஜு படேல். பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியைக் கேட்க மறப்பதில்லை என்றும் அந்த டிஜிட்டல் பிச்சைக்காரர் ராஜு படேல் கூறினார்.
இதேபோல தலைநகர் டெல்லியிலும் 29 வயதான ஆயிஷா ஷர்மா என்ற மாற்றுத்திறனாளி UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பணம் பெற்று வருகிறார்.
அடேங்கப்பா! அருண் நேருவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வேட்புமனுவில் வெளியான விவரங்கள்!