இந்தியாவிலேயே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல் நடத்தும் ஒரே கட்சி திமுகதான் என்று கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையை வாசித்து காட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதில், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு” என்று திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையை வாசித்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் அனைத்து துரோகங்களுக்கும் உடந்தையாக இருந்தது அதிமுக. பிரிந்தது போன்று நாடகமாடும் பாஜக-அதிமுகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பாஜகவின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். ரெய்டுகள் மூலம் அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது பாஜக.
அதிமுகவை போல் திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறது பாஜக. ரெய்டு என்ற சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் திமுக பயப்படாது. தற்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பல அச்சுறுத்தல்களை 75 ஆண்டுகளாக எதிர்த்து நின்றுதான் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
அமலாக்கத்துறை சோதனையில் ஒரு சதவீத வழக்குகளில் கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெறும் வெற்றி மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற அடையாளத்தை சிதைக்க நினைக்கிறது பாஜக. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தாக வேண்டும். வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.
இதற்கு முன்னதாக வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைத்ததால் திருவள்ளூரில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்த தகவலை அவர் காணொலி வாயிலாக தெரிவித்தார்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..
