எனக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது… அனைத்துக் கட்சி சகோதரர்களும் அதை தெரிஞ்சுக்கோங்க… தமிழிசை அதிரடி!!
தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் அனைத்துக் கட்சி சகோதரர்களும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் அனைத்துக் கட்சி சகோதரர்களும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எனக்கு எல்லைகள் இல்லை இங்கு வந்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர்… நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
கருத்து சுதந்திரம் எனக்கும் உள்ளது என்பதை அனைத்துக் கட்சி சகோதரர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 7 பேர் விடுதலை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அரசியல் கட்சியினர் 10% இட ஒதுக்கீடு 7 பேர் விடுதலையில் தங்களுக்கு வேண்டிய கருத்துகளை உச்சநீதிமன்றம் கூறினால் சரியான கருத்து. வேண்டாததை சொன்னால் விமர்சனம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவியுங்கள்… தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
நான் மக்கள் கட்சி, நான் மக்களோடு இருக்கும் கட்சிக்கான ஒரு தலைவர் என்று தெரிவித்தார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியின் 9 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு 432 பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளையும் தங்க நாணயங்கள் வழங்கினார்.