மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர்… நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மழை பாதித்த மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
மழை பாதித்த மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் அறிவியுங்கள்… தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
இதுவரை இல்லாத அவளவாக ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அங்கு மேலும் மழை தொடர்வதால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை பாதித்த பகுதிகளை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!!
அதன்படி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நாளை காலை 7.45 மணி முதல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். முன்னதாக இன்று சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.