நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி தற்கொலை.. திருவள்ளூர் ஆசிரமத்தில் நடந்தது என்ன..?
கடந்த ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் அந்த கோயிலில் உள்ள பூசாரி முனுசாமியை அணுகியுள்ளார். அப்போது, ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக கூறி அமாவாசை, பவுர்ணமியன்று பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி, கடந்த ஆண்டு பூசாரி, ஹேமமாலினிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி இரவு நேரத்தில் மாந்திரீகம் பூஜை செய்து வந்துள்ளார்.
ஊத்துக்கோட்டை அருகே ஆசிரமத்தில் 20 வயது கல்லூரி மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). இவர், திருவள்ளூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!
இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் அந்த கோயிலில் உள்ள பூசாரி முனுசாமியை அணுகியுள்ளார். அப்போது, ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக கூறி அமாவாசை, பவுர்ணமியன்று பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி, கடந்த ஆண்டு பூசாரி, ஹேமமாலினிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி இரவு நேரத்தில் மாந்திரீகம் பூஜை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கல்லூரி திறந்த பின்னும், கல்லூரி முடித்த பின்னும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஹேமமாலினியை பூசாரி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளார். 13ம் தேதி இரவு 12 மணிவரை பூசாரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் ஹேமமாலினி. இந்நிலையில், கடந்த 14ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, ஹேமமாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- ஆடைகளை உருவி தினமும் அட்டகாசம்.. வலி தாங்க முடியாமல் உணவில் விஷம் வைத்த மனைவி.. ஜஸ்ட் மிஸில் தப்பிய கணவர்.!
பின்னர், ஹேமமாலினிக்கு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும், பூசாரியிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆசிரமத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.