மாடசாமி நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவதும், அவரது ஆடைகளை உருவி தீயிட்டு கொளுத்துவதும்  தெருவில் வைத்து தலை முடியை பிடித்து அடிப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டதால்  கணவனை கொலை செய்ய முயற்சித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

விளாத்திக்குளம் அருகே குடிகார கணவனின் கொடுமை தாங்க முடியாமல் உணவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (32). இவர்களுக்கு திருமணமாகி வைத்திஷினி (12) மற்றும் முகாசினி (7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மதுபோதையில் வீட்டிற்கு வரும் மாடசாமி, இந்திராவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க;- இளஞ்சிட்டை பார்த்ததும் பத்திக்கிச்சு.. 20 வயது பெண்ணை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த தோழியின் கணவர்.!

இந்நிலையில், நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாடசாமி இந்திராவை மீண்டும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் இந்திரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாடசாமி சாப்பிட அமர்ந்துள்ளார். அவரது உணவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை இந்திரா கலந்து வைத்துள்ளார். இதனையடுத்து, இரண்டு வாய் உள்ளே சென்றதும் வித்தியாசமான தூர்நாற்றத்தை உணர்ந்திருக்கிறார். பின்னர், அக்கம்பக்கத்தினரிடம் காண்பித்தபோது அதில் களைக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்ததுள்ளது. சிறிது நேரத்தில் மாடசாமியும் மயங்கினார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு மாடசாமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியின் மனைவியின் இந்திராவை கைது செய்தனர்.

இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!

பின்னர், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்;- மாடசாமி நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவதும், அவரது ஆடைகளை உருவி தீயிட்டு கொளுத்துவதும் தெருவில் வைத்து தலை முடியை பிடித்து அடிப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டதால் கணவனை கொலை செய்ய முயற்சித்தேன் என்று தெரிவித்துள்ளார்.