காதல் திருமணம் செய்துவிட்டு கம்பி நீட்டிய கல்லூரி மாணவன்; ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தர்ணா
காதலித்து திருமணம் செய்து கொண்டு தனிமையில் விட்டுச் சென்ற காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யமுனா(வயது 20). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பட்டப் படித்து வரும் நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் கரிம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தேவா(20) என்பவரை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரீல்ஸ்கள் செய்து வைத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தணி முருகன் கோவில் அருகே யாருக்கும் தெரியாமல் தேவா, யமுனாவை தாலி கட்டி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தேவா யமுனாவிடம் பேசுவதை நிறுத்திய நிலையில் இது குறித்து தேவாவிடம் கேட்ட போது யமுனாவை தரகுறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து யமுனா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய தேவா மீது நடவடிக்கை எடுத்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறையினர் தங்களை அலைகழிப்பதாகவும் பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தை தனது தாய் மற்றும் பாட்டியுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
எல்லை மீறும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்; கரூரில் கந்துவட்டி கொடுமையால் விசம் குடித்த பெண் பலி
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது தங்களை காவல்துறையினர் அலைகழிப்பதாகவும், ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய தேவாவிற்கு அவர்களது உறவுக்கார பெண்ணுடன் நடக்க இருக்கும் திருமணம் ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் காதலனை கைது செய்யாமல் தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.