இந்தோனேசியாவில்  இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மத போதகர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சேலத்தை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 5  பேரும் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சேலம் பகுதி மக்கள் பீதி அடைத்துள்ளனர்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் உயிரிழப்பு 21,000நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 550 பேரைக் கடந்துள்ள கொரோனா பாதிப்பில், இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உயிரிழப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் இந்தியா முழுவதும் வைக்கப்பட்டது. இந்நிலையில், 3-ம் நிலையான சமுதாயப் பரவல் நிலை இந்தியாவுக்குள் வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர். 

இந்நிலையில், இந்தோனேசியாவிலிருந்து இஸ்லாமிய மத போதகர்கள் சுமார் 11 பேர் சேலம் வந்துள்ளனர். அவர்களுடன் வந்த வழிகாட்டி உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில், இந்தோனேசிய நபர்கள் 4 பேருக்கும், உடன் இருந்த வழிகட்டி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

இதனால், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் கடந்த 10 நாட்களாக அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார மசூதிகளில் தங்கியிருந்தனர். ஆகையால், மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும். அம்மாபேட்டை, சன்னியாசி குண்டு, கிச்சிபாளயம்,எருமாபாளயம், பொண்ணமாபேட்டை, மசூதிகளில் இவர்கள் சென்றுவந்துள்ளனர். ஆகையால் இப்பகுதி மக்கள் தீவிரமாக ஊரடங்கை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.