ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்த விசைத்தறி தொழிலாளி விரக்தியில் விபரீத முடிவு

எடப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்த விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

powerloom weaver commit suicide in salem district vel

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட சின்னமணலி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. விசைத்தறி தொழில் நடத்தி வரும் இவருக்கு  ராஜலட்சுமி என்ற மனைவியும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில அங்கமுத்து கடந்த ஆறு மாதமாக ஆன்லைன் ரம்மி மற்றும் ஒரு நம்பர் லாட்டரி உள்ளிட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ரூ.5 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

அழகிரியின் மகன் துரை தயாநிதி.. உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

இதனால் விரக்தி அடைந்த அங்கமுத்து கடந்த 4ம் தேதி அதிகாலையில் தற்கொலை செய்வதாக முடிவு செய்து வீட்டில் இருந்த விசத்தை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ராஜலஷ்மி கணவரிடம் கேட்டபோது விசத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அங்கமுத்துவை எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 

Vijay: 2026ல் தளபதியை தமிழகத்தின் முதல்வராக்குவோம்; தொண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் சபதம்

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது என்று எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios