அழகிரியின் மகன் துரை தயாநிதி.. உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

Durai Dayanidhi : அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் CMC மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

Alagiri Son Durai Dayanidhi is gaining health please dont spread rumors says cmc vellore ans

துரை தயாநிதிக்கு மயக்கம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ந்த அவருடைய குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பிறகு துரை தயாநிதிக்கு மூளையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலத்தை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் சுமார் 3 மாத காலம் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி, கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

யார் இந்த பொற்கொடி? 20 வயது மூத்தவரை விரும்பி திருமணம் செய்துகொண்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி!

அங்கும் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலூரில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து, அவரை நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. 

வேலூர் CMC மருத்துவமனை 

அந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், துரை தயாநிதிக்கு சிகிச்சை நல்லபடியாக நடந்து வருவதாகவும், அவர் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios