2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யை முதல்வராக்குவோம் என கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டத் தலைவர் பரணி பாலாஜியின் மகளின் மஞ்சள் நீராட்டு நிகழ்வில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்த தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய புஸ்ஸி ஆனந்த்.

ஜெயலலிதா ஆட்சி அமைக்கவும்.. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கும் முக்கிய காரணமே ராமதாஸ் தான் - டிடிவி தினகரன்

தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம். நாம் கடந்த 30 வருடமாக தற்போது வரை நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பல ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிற கட்சி தமிழக வெற்றி கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். நாம் கண்டிப்பாக அந்த தளபதியை தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

அழகிரியின் மகன் துரை தயாநிதி.. உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

உங்களின் ஒவ்வொருவரின் உழைப்பால் தான் தமிழ்நாட்டில் நமது இலக்கை 2026 வெற்றிபெறும். கண்டிப்பாக 2026 அதற்கு நாம் உழைக்க வேண்டும். உண்மையாக உழைக்க வேண்டும், மக்களுக்காக உழைக்க வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.