வந்தே பாரத் ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி உயிரிழப்பு; 2 பேர் சஸ்பெண்ட்
சேலத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழந்த விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்ட ஊழியர்கள் இருவரை இடைநீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டார்.
சென்னை, கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதி வந்தே பாரத் ரயிலில் சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70), அவரது மனைவி ரோஸ் மார்க்ரேட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.
மாலை 6.05 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரயில், 4வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ், ரயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும், மறுபுறத்தில் 5வது நடைமேடையின் தண்டவாளத்தில் பவுலேஷ் விழுந்தார்.
காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்; அண்ணனுக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு
சுமார் 6 அடிஉயரத்திற்கு மேல் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தார். பின்னர் அவர், நேரடியாக கோவைக்கு புறப்பட்டுச் சென்று, விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதில், சேலம் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் வந்தே பாரத் ரயில் வந்து நிற்கவும், 5வது நடைமேடை பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதை வழியே இறங்கி வந்து வந்தே பாரத் ரயிலின் அவசர கதவின் பட்டனை அழுத்தி திறந்து, ரயிலில் ஏறி மறு முனையில் 4வது நடைமேடையில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.
பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்த எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பிய பாஜக தொண்டர்கள்
அந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில், அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை திறந்து வைத்த ரயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.
அதில் அவர்கள், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பாயிண்ட்மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், ஒய்.எஸ். மீனா எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் தற்போது கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள், துறைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை இரண்டு ஊழியர்கள் திறந்து வைத்ததால் தான். பயணி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிய வந்திருக்கும் இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.