நாமக்கலில் 250 ஆடுகள், 2500 நாட்டு கோழிகள என 20 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட கறி விருந்து

பரமத்தி வேலூர் அருகே கோவில் திருவிழாவில் 250 ஆடுகள்,  2500 கிலோ நாட்டுக்கோழிகள் சமைத்து பொதுமக்களுக்கு தடபுடலாக அசைவ விருந்து வழங்கிய கோவில் நிர்வாகம்.

250 goats and 2500 country chicken served 20 thousand people in namakkal district temple festival

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே இராமதேவம் மகா கணபதி, பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த கடந்த மே மாதம் 25ம் தேதி நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து கடந்த 47 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று 48வது நாள் மண்டலபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர்களை தூவி வைத்தனர். பின்னர் காளியம்மன், கருப்பனார் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு  சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டன.

உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் முகாம் 24 முதல் தொடக்கம் - மேயர் பிரியா தகவல்

இதனைத் தொடர்ந்து இன்று அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் தழைக்கட்டு பொங்கல் விழாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிப்பாட்டு மக்கள் தங்கள் நேர்த்திக்கடனாக கருப்பண்ணசாமிக்கு 250 ஆடுகள் மற்றும் 2500 கிலோ நாட்டுக் கோழிகளை பலியட்டனர். இதற்காக பிரத்யேகமாக  பிரமாண்டமான சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு ஆடு, கோழிகளை சமைத்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் காலை முதல் இரவு வரை அசைவ அன்னதான விருந்து வழங்கினார்கள்.

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள்

இந்த அசைவ அன்னதான விருந்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அசைவ விருந்து சாப்பிட்டு சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து குடிப்பட்டு மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios