நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த ஆர்.எஸ்.எஸ். தேசியத்தலைவர் மோகன் பகவத்துக்கு அம்மாவட்ட படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

badugar people did traditional type of invite to rss president mohan bhagwat in nilgiris

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டமாகும். இது ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்தார்.
 
அவருக்கு படுகர் சமுதாய மக்கள் சார்பில் பாரம்பரிய வழக்கபடி உற்சாகமான  வரவேற்பு அளிக்கபட்டது. இட்டுகல் போஜராஜ் தலைமையில் படுக சமுதாய தலைவர்கள் இணைந்து ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு படுக உடை அணிவித்து  பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.

பேருந்தில் உள்ளே வரச்சொன்ன நடத்துநரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய அரசுப்பள்ளி மாணவர்

இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

தேனியில் குடிநீர் குழாய் தடுக்கி கீழே விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios