உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கோலாகலமாக தொடக்கம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வியாழன் அன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பேராலயத்தில் இருந்து அன்னையின் சொரூபம் தாங்கிய கொடியினை மாலை 5.45 மணிக்கு பக்தர்கள் எடுத்து வந்து கடைவீதி மற்றும் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக பேராலயத்தின் முகப்பிற்கு கொண்டு வந்தனர்.
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாக்கு போகனுமா.? இதோ போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ் கொடியினை புனிதம் செய்து சிறப்பு பிராத்தனை செய்து கொடி ஏற்றப்பட்ட போது பேராலயத்தில் அலங்கார மின்விளக்கு ஏற்றப்பட்டு ஜொலித்தது பின்னர் வர்ணஜால வான வேடிக்கைகள் நிகழ்த்தினார். வெள்ளிக் கிழமை முதல் தினந்தோறும் சிறிய தேர் பவனியும் இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 7 ம் தேதி பெரிய தேர் பவனியும் நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாக்கு போகனுமா.? இதோ போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
இவ்விழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று கொடி பவனியின் போது அன்னை மரியே வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.