வேளாங்கண்ணி தேவாலய திருவிழாக்கு போகனுமா.? இதோ போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவிற்கு பக்தர்கள் வசதியாக சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் குழுவாக பயணம் செய்பவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா ஆகஸ்ட் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனையடுத்து பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த மட்டுமில்லாமல் பாந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சிறப்பு பேருந்து
இந்தநிலையில் அதிகமான அளவு பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாகவும் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு லிமிடெட் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது.
5 கிலோ தக்காளி 100 ரூபாய் தானா.? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன தெரியுமா.?
குழுவாக பயணம் செல்ல பேருந்து இயக்கம்
இதுமட்டுமின்றி குழுவாக வேளாங்கண்ணி பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.