Special Train : வேளாங்கண்ணி கோவில் திருவிழா.! கூடுதல் சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே தெரியுமா.?
வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி ஏற்கனவே பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Velankanni
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி கோயில் கொடியேற்றம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்வானது சுமார் 10 தினங்களும் பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும். இதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள். இதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதன் படி பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது.
லோக்மான்ய திலக் டூ வேளாங்கண்ணி
லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது (ரயில் 01161 / 01162) ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு லோக் மான்யா திலக் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் அடுத்த நாள் இரவு 11.50 மணியளவில் வேளாங்கண்ணியை வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயிலானது வேளாங்கண்ணியில் இருந்து லோக் மானிய திலக் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்படுகிறது. 29ஆம் தேதி லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தை மாலை 4:20 மணியளவில் சென்று சேர்கிறது.
ரயில் ரூட் என்ன.?
இந்த சிறப்பு ரயிலில் 4 மூன்றாம் வகுப்பு இசி பெட்டிகளும், 14 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும், இரண்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது லோக்மான்ய திலக், பூனே, சோலாப்பூர், கடப்பா, திருத்தணி, வேலூர், விழுப்புரம், கடலூர் வழியாக வேளாங்கண்ணியை சென்று சேருகிறது.
Velankanni
கூடுதல் ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி கோயில் கொடியேற்றம் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ரயிலானது லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 7ஆம் தேதியானது இயக்கப்படுகிறது. ரயில் எண் 01163 / 01154 இந்த ரயில் அடுத்த நாள் இரவு 11.50 மணியளவில் வேளாங்கண்ணியை வந்தடைகிறது.
முன்பதிவு எப்போது தொடக்கம்.?
இதேபோல செப்டம்பர் 9ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து லோக் மான்யா திலக் ரயில் நிலையத்திற்கு இந்த ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை மறுதினம் 14ம் தேதி காலை 8 மணி அளவில் தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.