மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் டன் கணக்கில் உணவுகள் வீணாகி கொட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் நேற்று அதிமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ரயில், கார், வேன்கள் மூலம் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். 

YouTube video player

மாநாடு நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் மதுரை வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாட்டு பந்தலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து பரபரப்பாக சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஏ,பி,சி என மூன்று இடங்களில் தொண்டர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. 

திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் டீ பிரேக் எடுத்த தொண்டர்கள்; சிற்றுண்டிக்கு படையெடுத்த உடன்பிறப்புகள்

ஒவ்வொரு உணவுக்கூடத்திலும் 300 கவுண்டர்கள் மூலம் கட்சி தொண்டர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக புளியோதரை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், என மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. உணவின் தரம் சரியில்லை எனவும், சரியாக வேக வைக்கப்படவில்லை எனவும் தொண்டர்கள் உணவுகளை கீழே கொட்ட தொடங்கினர். இதனால் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேறைய மாநாட்டில் தயாரான உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டுத் திடலில் கொட்டப்பட்டுள்ளன.

தென்காசியில் திமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் கணவர் தற்கொலை; காவல்துறை விசாரணை

மாநாட்டு மைதானத்தில் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அங்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும், உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டன் கணக்கில் உணவு அந்த திடலில் கொட்டப்பட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் உணவு வீணாகிக் கொட்டப்பட்டுள்ள சம்பவத்திற்கு விமர்சனம் எழுந்துள்ளது.