மதுரை தவெக மாநாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தளபதி விஜய் மறைமுகமாக சீண்டினார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Vijay Insulted Rajinikanth At The TVK Conference: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் விஜய் மேடையேறினார். இதன்பிறகு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைததார். மேலும் தங்களது கட்சியின் கொள்கை தலைவர்களான காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, 40 அடி உயர கொடிக்கம்பத்தில் தவெக கொடியை ஏற்றினார்.
சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்
இதனைத் தொடர்ந்து தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார். அப்போது பேசிய அவர், ''சிங்கம் எப்பவும், வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும். வேடிக்கை பார்க்க வராது. அப்படியே வரும்போதும், உயிரோடு இருக்க தன்னைவிட பெரிய மிருகத்தைதான் வேட்டையாடும். அப்பவும் எவ்வளவு பசி இருந்தாலும், உயிரில்லாத, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பாக்காது. சிங்கத்துக்கு கூட்டத்தோட இருக்கவும் தெரியும், A LION IS ALWAYS A LION. EVEN IF IT IS SINGLE'' என்று தெரிவித்தார்.
ரஜினியை சீண்டிய விஜய்
தொடர்ந்து பேசிய அவர், ''தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல்'' என்றார். மாநாட்டில் பேசிய விஜய் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சீண்டினார். அதாவது விஜய் தனது பேச்சின்போது, ''நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவரெல்லாம் அரசியலுக்கு வர மாட்டார். அவரே வரவில்லை, இவர் எங்கே வரப்போகிறார் என்று நிறைய பேர் ஜோசியம் சொன்னார்கள். கட்சியின் பெயர் அறிவித்தவுடன் மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமே என்றனர். கூட்டமெல்லாம் எப்படி ஓட்டுகளாக மாறும்'' என்று விமர்சனம் வைத்தனர்'' என்றார்.
சினிமாவில் விஜய் ரோல் மாடல் யார்?
நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி, பின்பு உடல்நிலையை காரணம்காட்டி அரசியலில் இருந்து பின்வாங்கினார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக பலரும் தெரிவித்தனர். இதையே விஜய் தனது பேச்சின்போது அவர்(ரஜினி) வரல; இவரும் வரமாட்டார்னு சொன்னாங்க என்று தெரிவித்தார். மேலும் விஜய் தனது பேச்சின்போது சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்று குறிப்பிட்டார்.
ரஜினி ரசிகர்கள் கண்டனம்
விஜய்யை பொறுத்தவரை சினிமாவில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை தான் காப்பி அடித்து வந்தார். சினிமாவில் ரஜினி பின்பற்றும் பாணியை தான் அவர் பின்பற்ற்றினார். ரஜினிக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டத்தை அவரும் வைத்துக் கொண்டார். ''அண்ணாமலை தம்பி நான் ஆட வர்றேன்டா..'' என தனது படத்தில் பாடலே வைத்து ரஜினியின் தம்பி நான் தான் என குறிப்பிட்டு வந்தார். இப்படி சினிமாவில் ரஜினியை காப்பி அடித்த விஜய், இப்போது சினிமாவில் எனது தலைவர் எம்.ஜி.ஆர் என குறிப்பிட்டு இருப்பது ரஜினி ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாக்கியுள்ளது. அரசியலுக்காக விஜய் இப்போது எம்.ஜி.ஆரை தூக்கிபிடித்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
