கரூர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்ர் கோவிலில் எச்சில் இலையில் உருளும் அங்கப்பிரதட்சணத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர்ர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
இந்நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சனம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு மே 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு மே 18ம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிசாதன் அளித்த தீர்ப்பு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்! கோடை விடுமுறை எப்போது? எத்தனை நாட்கள்? மீண்டுகள் பள்ளிகள் திறப்பது எப்போது?
மேலும் எச்சில் இலையில் உருளுவதை வழிபாட்டு முறையாக கூறினாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதும் எனவே பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
