- Home
- Tamil Nadu News
- குஷியில் பள்ளி மாணவர்கள்! கோடை விடுமுறை எத்தனை நாட்கள்? மீண்டுகள் பள்ளிகள் திறப்பது எப்போது?
குஷியில் பள்ளி மாணவர்கள்! கோடை விடுமுறை எத்தனை நாட்கள்? மீண்டுகள் பள்ளிகள் திறப்பது எப்போது?
TN School Student Summer Holiday 2025: தமிழ்நாட்டில் முழு ஆண்டு தேர்வு முடிந்து எத்தனை நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Public Exam
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 10ம் தேதி வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
School Education Department
இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1ம் வகுப்பு 5ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மாணவர்கள் இன்ப அதிர்ச்சி! மார்ச் 14ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Student Exam
அதேபோல் 6, 7, 8, மற்றும் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தொடங்கி 24ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. அதாவது ஏப்ரல் 8ம் தேதி தமிழ்ப்பாடத் தேர்வு, 9ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணக்கு, 17ம் தேி விருப்ப மொழி, 21ம் தேதி அறிவியல், 22ம் தேதி விளையாட்டு, 23ம் தேதி 6, 7ம் வகுப்புகளுக்கு மட்டும் சமூக அறிவியல், 24ம் தேதி 8, 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கின்றன.
Annual exam
மேற்கண்ட தேர்வுகளில் 1, 2, 3,ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 4, 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக 6, 7ம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 8, 9ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் சமூக அறிவியல் தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Summer Holiday
இந்நிலையில், தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது. பின்னர் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 40 நாட்களும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 36 நாட்களும் கோடை விடுமுறை கிடைக்கிறது.