குடும்பத் தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Magalir Urimai Thogai: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

Magalir Urimai Thogai
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதம், மாதம் அடிப்படை தேவைகளுக்காக மற்றவர்களை கையை எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டது.
Magalir Urimai Thogai updates
அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரி, கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மாணவர்கள் இன்ப அதிர்ச்சி! மார்ச் 14ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
Puducherry
இந்நிலையில் புதுச்சேரியில் குடும்பத் தலைவலிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.2,500 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
CM Rangasamy
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10ம் தேதி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து இன்று 2025 - 2026ம் நிதியாண்டிற்கான ரூ.13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களக்க இரண்டு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பவுர்ணமி செல்லும் பக்தர்களுக்கும் குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
School Student
அரசு பள்ளி மாணவர்களக்கு வாரம் 3 நாட்கள் வழங்கப்படும் முட்டை இனி பள்ளியின் அனைத்து வேலைநாள்களுக்கும் வழங்கப்படும். அதேபோல் அரசு மற்றும் அரசி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும். முதியோர் உதவி தொகை பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்கு தொகை ரூ.20,000 உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.