மாணவர்கள் இன்ப அதிர்ச்சி! மார்ச் 14ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Colleges Holiday: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Choodeswarar Temple
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலைக்கோயில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில். இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டு மாசி மாதம் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவை காண தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
Local Holiday
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா மார்ச் 14ம் தேதி நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
School Holiday
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான மார்ச்14ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 22ம் தேதி சனிக்கிழமைபணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?
School Working Day
இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளன்று ஒசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவித்துள்ளார்.