பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா முன்னிட்டு மார்ச் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Masi Magam Festival
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து மகாமகம் குளத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோன்று கும்பகோணத்தில் நடைபெறும் மாசிமகம் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி மாத பவுர்ணமியும் மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய தினம் மாசி மகம் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு மற்றும் பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
Local Holidays
இந்த நாளில் காசிக்கு இணையான கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 12ம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என்பதால் அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Thanjavur District Collector
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசியகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்படுவது வழக்கம்.
School Holiday
அதன்படி, இந்த ஆண்டும் கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு வருகிற மார்ச் 12ம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை என்றாலும், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Government Employee
ஆனாலும் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
School Working Day
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.