- Home
- Tamil Nadu News
- திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
Southern Railway: திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள் மார்ச் 17 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. .

Railway Department
இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம்.
Train engine
இது குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்நிலையில் மகா கும்பமேளாவுக்காக நாடு முழுவதும் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களின் பெட்டிகள் தெற்கு மத்திய ரயில்வேக்குள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
MEMU Trains
இதில், திருப்பதி காட்பாடி, காட்பாடி ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் மார்ச் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
MEMU train services
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 15 வரையிலும், காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ரயில் மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
MEMU Train Cancellation
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 15 வரையிலும், காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ரயில் மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Southern Railway
அதேபோல். திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் காலை 10.35 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 16 வரையிலும், காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் மெமு ரயில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்படகிறது.
MEMU
மேலும் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் மெமு ரயில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 17 வரையிலும், ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில் பிற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.