இந்தியாவிலேயே தரம் குறைந்த மது தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது - கிருஷ்ணசாமி
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தரக்குறைவான மது விற்பனை செய்யப்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 1937ல் இருந்து 71 வரைக்கும் பூரணமான மதுவிலக்கு அமலில் இருந்தது. 71ல் அன்றைய கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து மது விலக்கு அமல்படுத்துவதும் தளர்த்தப்படுவதுமாக மாறி மாறி கடந்த 20 வருடமாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்தப்பட்டுத்தப்பட்டு டாஸ்மாக் என்ற நிறுவனமே மது கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே குடித்துக் கொண்டு இருந்த நிலை மாறி இப்பொழுது ஏறக்குறைய 60% பேர் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட மதுபலக்கத்திற்கு ஆளாகி அதன் காரணமாக அவருடைய உடல்நிலை மிகப்பெரிய அளவுக்கு பாதிக்கப்படுகிறது. மது பழக்கத்தால் தொழிலாளர்கள் ஆட்டோ ஒட்டுநர்கள் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சீல் வைக்கப்பட்ட கடையில் மதுபானங்களை திருடிய ஊழியர்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
20 ரூபாய்க்கு தயாராகும் மது 150, 160 முதல் 300 ரூபாய் வரை விற்க்கப்படுகிறது. மதுபானத்தை டாஸ்மார்க் கொள்முதல செய்வதிலேயே ஊழல் நடைபெறுகிறது. ஒரு கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் வாங்கும்போது 60% என 60 லட்சம் பாட்டில்களுக்கு மட்டுமே ஆயத்தீர்வை வரி செலுத்தப்படுவதாகவும் 40 லட்சம் பாட்டில்களுக்கு வரி செலுத்தப்படவில்லை இதில் ஊழல் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே தரக்குறைவான மது தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுவினால் வீட்டினுடைய நலமும் நாட்டினுடைய நலனும் பாதிக்கப்படுகிறது. டாஸ்மார்க் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெறுகிறது. கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வலிறுத்துவோம். தமிழகத்தில் உள்ள 5362 மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும்.
விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும் - வானதி சீனிவாசன்
உலகத்தில் 500 கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது இது மதுவிலக்கின் அம்சம் அல்ல. மதுபான கடைகள் மூடுவதில் ஊழல் நடைபெற்றுள்ளது குறைவாக விற்பனை நடைபெறும் கடைகளும் மனமகில் மன்றங்களின் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைகள் தான் மூடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு 2011 முதல் 2016 வரை அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணி நியமன லஞ்சம் பெற்றதாக கொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கதுறை சோதனை நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்து அதனை கண்காணிக்கிறது. அமலாக்கத் துறை 1956 முதல் செயல்படும் அமைப்பு. அமலாக்க துறைசட்டவிரோதமாக நடைபெறும் பணப் பரிமாற்றத்தை கண்காணிக்கும் தீவிரவாதியாக மற்றும் சட்டத்திற்கு புறம்பான பண வழிகாட்டுதல் போன்றவற்றை கண்காணிக்கும் அமைப்பாகும். செந்தில் பாலாஜி மீதான தற்போதைய வழக்குகளில் தப்பித்தாலும் டாஸ்மாக் பார் ஊழல் வழக்கில் தப்ப முடியாது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் வராமல் போகலாம் அதைப் பற்றி ஒன்றும் கவலை இல்லை ஆனால் ஒரு நல்ல விஷயத்தை கூறினால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கூறியுள்ள கருத்தை வரவேற்கிறேன் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.