Asianet News TamilAsianet News Tamil

விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும் - வானதி சீனிவாசன்

நடிகர்கள் படப்பிடிப்புக்கு வருவது போல அரசியலை நினைப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

mla vanathi srinivasan comments on vijay political entry
Author
First Published Jun 22, 2023, 7:11 PM IST

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் வாங்கப்பட்ட மேஜை மற்றும் பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட புதிய டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை பயன்பாட்டுக்காக வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது, 'மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆசிரியர்களின் சம்பளத்தை கூட பெற்றோர்கள் சங்கம் வாயிலாக தொகுத்து வழங்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவர்களை ஒரே வகுப்பில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். 

விஜய் முதல்வராக வரவேண்டும் என்ற ஆசையில் தவறில்லையே - பாஜக எம்எல்ஏ நயினார் நகேந்திரன்

ஒருபுறம் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என சொல்கிறோம். ஆனால், ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை அரசாங்க பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது. ஆசிரியர் தேர்வுகளில் ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, கல்வித் துறை அமைச்சர் பள்ளிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாஜகவினர் கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சிறிய நபர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்தாலும் விமர்சனங்களை முன் வைத்தாலும் கைது செய்வது, இந்த அரசாங்கம் தங்களை பலம் இல்லாதவர்களாக கருதுகிறார்கள் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் குறித்து விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடியையும், மத்திய அரசை பற்றியும் மோசமான கருத்து தெரிவிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஓட்டுநரின் சாதுர்யத்தால் நுலிழையில் உயிர் தப்பிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது ஸ்டாலின் பீகார் செல்லும்போது #GoBack ஸ்டாலின் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. பிஹார் மக்கள் குறித்து தவறாக சித்தரித்ததனால் இது திருப்பி கிடைக்கிறது.

தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியவர், 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஏனென்றால் இளைஞர்கள் அதிகமாக அரசியலில் பங்குபெறும் போது ஜனநாயகத்திற்கு புதிய வேகம் கிடைக்கும். எனவே நடிகர் விஜய்யும் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். 

விஜய் மட்டுமல்ல எந்த நடிகரையும் வரவேற்கிறோம். இப்படி வரும்போது மக்களுக்கு எப்படி வேலை செய்கிறார்கள், மக்களுடைய பிரச்சினைகளை எப்படி பேசுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன்பு வந்த ஒரு நடிகர் அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறினார். படப்பிடிப்பு போல அரசியலை நினைத்துக் கொள்கின்றனர். அது அரசியல் கிடையாது. வாழ்க்கையை கொடுப்பதுதான் அரசியல். நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்' என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios