நடிகர் விஜய் முதல்வராக வரவேண்டும் என்ற அவரது ரசிகர்களின் ஆசையில் தவறில்லையே என்று திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்ன் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், உதவி பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டப் பணிகளை அவரது ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அண்மையில் நடிகர் விஜய் தமிழகம் மற்றும் புதுவையில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

அந்த விழாவைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வரக்கூடும் என்ற கருத்து அதிகரித்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் தமிழகத்தின் எதிர்காலமே, 2026ன் முதல்வரே உள்ளிட்ட வாசகங்களுடன் பேனர்கள் வைத்து தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுநரின் சாதுர்யத்தால் நுலிழையில் உயிர் தப்பிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் எந்தவித தவறும் கிடையாது. விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவரை நிச்சயம் கூட்டணிக்கு அழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஆட்டோ மீது பேருந்து மோதி கோர விபத்து; 5 பேர் படுகாயம்