என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ரகசியத்தை உங்களுக்கு சொல்வேன் - சரத்குமார் பேச்சு

2026ல் என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

i will say how to survive 150 years when i become a cm says sarathkumar

மதுரை பழங்காநத்தம் சுற்றுசாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுகூட்டத்தில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசும்போது, தீர்மான விளக்க கூட்டத்தின் வாயிலாக உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும். மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனஅழுத்தத்தை உண்டாகி வருகிறது.

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் அஞ்ச வேண்டாம்..! கோரிக்கையை நிறைவேற்றும் பணி தொடங்கியாச்சு- மனோ தங்கராஜ்

பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகைகளில் உருவெடுத்து உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் 2025ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதனை அடுத்து இளைஞர்களின் மூளையை மலுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளின் சதிதான்.

எனக்கு 69 வயது ஆகிறது. இன்னும் 150 வயது வரையில்  உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன். அதனை 2026ம் ஆண்டு அறியணையில் என்னை ஏற்றினால் சொல்வேன். தற்போது நமது கூட்டத்தில் 440 வோல்ட் போதையில் வந்து தள்ளாடியபடி பேசி வருகிறார். அவர் திருந்தும் வகையில் அவருடன் பேச வேண்டும் என்று  விருப்பம்தான். ஆனால் நிலைமை சரியில்லை.

தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை  புறக்கணித்தால் மட்டும் போதும்.  தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவிற்கு எதிராக அடுத்தடுத்து களம் இறங்கும் அதிமுக.! இபிஎஸ் உத்தரவையடுத்து போராட்டத்தில் குதித்த நிர்வாகிகள்

கூடங்குளம் வந்தால் தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழவேண்டும் என்பதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் செய்தேன். அதன் படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருகிறது. தமிழகத்தின் கல்வி இந்திய அளவில்  சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. 

"Social Drinking" என்கிற பெயரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாசாரங்களை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும்.  மாலை வேலைக்கு பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் சோதனை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. மது இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது. அம்மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் மது விலக்கை அமல்படுத்த முன்வரவேண்டும்.

அதன், முதல் நோக்கமாக மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios