திமுகவிற்கு எதிராக அடுத்தடுத்து களம் இறங்கும் அதிமுக.! இபிஎஸ் உத்தரவையடுத்து போராட்டத்தில் குதித்த நிர்வாகிகள்
கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கள்ளசாரய மரணம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு அடுத்தடுத்து 23 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று, ஆளுநரிடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டித்து மே 29 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிக்கையில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு;
பாஜக அரசின் மக்கள் விரோத அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகு தொலைவில் இல்லை… சீமான் கருத்து!!
போரட்டத்தில் அதிமுக
கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இன்று ( 29.05.2023 - திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திமுக அரசை விளாசும் இபிஎஸ்
இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்பட்டு விட்டதால் அமைப்பு ரீதியாக சென்னையில் செயல்பட்டு வரும் 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள்