குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு, பெற்றோர் 10 கி.மீ நடந்து சென்ற அவலம்..! தமிழக அரசே முழு பொறுப்பு- அண்ணாமலை

குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிற்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Annamalai has accused the DMK of being responsible for the child death without access to medical treatment due to lack of road facilities

பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு

ஒன்றரை வயது பெண் குழந்தையை பாம்பு கடித்த நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால்  அந்த குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 10 கிலோ மீட்டர் குழந்தையின் சடலத்தை பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, பாம்பு கடித்து, சரியான சாலை வசதி இல்லாததால், சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாததால் மரணமடைந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.  அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Annamalai has accused the DMK of being responsible for the child death without access to medical treatment due to lack of road facilities

10கி.மீ சடலத்தை தூக்கி சென்ற பெற்றோர்

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? சரியான சாலை வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியாததால் ஒரு குழந்தை இறப்பு என்பதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிற்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது. 

திமுக அரசே பொறுப்பு

ஏற்கனவே, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது போல, தற்போது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் பயன்படுத்தாமல் என்ன செய்கிறது தமிழக அரசு?  இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழக அரசே முழு பொறுப்பு. தமிழக அரசின் புறக்கணிப்பால் இனியும் ஒரு இழப்பு ஏற்படாமல், தமிழகம் முழுவதும் சரியான சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கான சாலைகளை உடனே அமைக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் சாலைப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அந்த பெருமையை மோடி கிட்ட அடகு வச்சு ஆதின மரபுக்கு அவப்பெயரை ஏற்படுத்தாதீர்.. மதுரை ஆதீனத்தை விளாசிய ஜோதிமணி.!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios