ஆன்லைன் விளையாட்டை தடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் - திருமாவளவன்

ஆன்லைன் விளையாட்டு எந்த விளையாட்டாக இருந்தாலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதாலும், உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலங்கள் நடைபெறுவதாலும் அதை தடுப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று விடுதகலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

Government should take immediate action to ban online games says thirumavalavan

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தெலங்கான 'ராஷ்டிரிய சமிதியின் தேசிய கட்சி துவக்கவிழாவில் கலந்துகொண்டேன். இது ஜனநாயக சக்திகள், மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு அணியில் திரள நடைபெற்ற கூட்டமாகும்.

கர்நாடகத்திலிருந்து குமாரா சாமி கவுடா மற்றும் தேசிய அளவிலான விவசய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மண்டல் கமிஷன் தலைவர் V.P மண்டல் பகுஜன் சமாஜ் தலைவர் கான்சிராம் அவர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை விடுத்தேன்.

வரும் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்போம். எனது தலைமையில் நாளை 4 மணியளவில்  பாஞ்சான்குளம் பகுதியில் சாதிய கொடுமைகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெரும்.

இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை

பாஞ்சான்குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுபாடு என்ற பெயரில் சாதியின் பெயரால் சமுக புறக்கணிப்பை நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 25 ஆண்டுகள் நடைபெற்ற சாதிய கொடுமைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கோவையில் நாளை நடைபெறும் எனது மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுவது போல் பிற மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தை சார்பில் வலியிறுத்துகிறோம்.

இன்றைய தமிழ் சமூகத்தில் தமிழ் சமூகம் சமஸ்கிருத சக்திகளால் திணிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்துவது, மாமன்னன் ராஜராஜன் இந்து என அடையாளபடுத்துவது ஆபத்தானது.

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது

சனாதனமான முறைகளை சமஸ்கிருதமாய மாதலை கண்டிக்கும் விதமாக அமைத்தது. இது ஒட்டு மொத்த இந்துக்களை இழிவு படுத்துவது போன்று தோற்றத்தை சங்பரிவார் அமைப்புகள் செயல்படுகிறது. இத்தகைய போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது.

சிவகாசி பசுமை பட்டாசுகள் என்ற பெயரில் தொழில் முடக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தும் தமிழக அரசு அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்.

ஆன்லைன் விளையாட்டு எந்த விளையாட்டாக இருந்தாலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதாலும், தானே மாய்த்துக் கொள்ளும் அவலங்கள். அதை தடுப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு இளம்பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios