பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே சாமிதுரை என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டு படை என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நாங்குநேரியை அடுத்த மஞ்சகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை.. இன்று எந்தெந்த பகுதியில் கனமழை..? வானிலை அப்டேட்
சாமிதுரை கொலை வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், ராக்கெட் ராஜா காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதை அறிந்த காவல் துறையினர் விமான நிலையத்தில் வைத்தே அவரை அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் ராக்கெட் ராஜா அவர் சார்ந்த சமூக மக்களுக்கு தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.