இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை
இந்து சமய நலத்துறையை சைவ சமய நலத்துறை, வைணவ சமய நலத்துறை என பிரித்து பராமரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற விசிக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மேடையில் பேசுகையில், இந்த திருமண நிகழ்ச்சி மூலமாக தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பிரித்து பராமரிக்க வேண்டும்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது
சைவ சமயத்தை மேம்படுத்துவதற்கு அதன் சொத்துக்களை பாதுகாப்பதற்கு அந்த சொத்துக்களை பராமரிப்பதற்கு ஒரு தனி அறநிலையத்துறை தேவைப்படுகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை சமயத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கையுடைய மக்களுக்காக சொல்கிறேன். மதுரை ஆதீனம் காலமாகிவிட்டார். அடுத்து ஒருவர் பொறுப்பேற்று இருக்கிறார். அதைப்போல ஒவ்வொருவரும் காலமாகும் போது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள முடிகிறது, சைவர்களின் அடையாளத்தை அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆனால் ஆர்எஸ்எஸ் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க இந்த அடையாளங்கள் பறிபோகும். சனாதனமயமாதல் என்பது வலுப்பெறும். அது கூடாது என்பதற்காகத்தான் கவலையுடன் சொல்கிறோம். சைவ சமய அறநிலையத்துறை தனி நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.
இந்து, இஸ்லாம் போன்று ஆல்கஹாலிக் என்ற சமூகம் உருவாகும்; காந்தியவாதிகள் எச்சரிக்கை
வைணவ சமய அறநிலையத்துறை தனித்து இயங்க வேண்டும். சனாதன சக்திகளை எதிர்ப்பதற்கு தனிப்பட்ட வெறுப்பு காரணம் இல்லை. அரசியல் காரணம் இல்லை, தேர்தல் அரசியல் காரணமில்லை. பாஜகவுக்கு ஒரு அரசியல் முகம் இருக்கிறது. ஆர்எஸ்எஸ்க்கு பயங்கரவாத முகம் இருக்கிறது. அது பாசிசமுகம் ஆனால் பாஜகவுக்கு அரசியல் முகம், ஆர்எஸ்எஸ் காந்தியை கொன்ற இயக்கம். காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம், பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத்தில் வன்முறையை செய்த இயக்கம். இப்படி ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. ஆகவே நாம் எதிர்ப்பதற்கு காரணம் சமூக பொறுப்புணர்வு என்றார்.