Asianet News TamilAsianet News Tamil

இந்து, இஸ்லாம் போன்று ஆல்கஹாலிக் என்ற சமூகம் உருவாகும்; காந்தியவாதிகள் எச்சரிக்கை

மதுவிலக்கை அமல்படுத்தாமல் காந்தியை கொண்டாடுவதில் பலனில்லை, மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் தேர்தலில் ஓட்டு போடுவோம் என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

there is an no use to celebrate gandhi without prohibition of alcohol says gandhiya makkal iyakkam
Author
First Published Oct 7, 2022, 5:55 PM IST

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி நெல்லையைச் சேர்ந்த காந்திய மக்கள் இயக்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மதுவினால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் கையில் மண்டை ஓடு கொண்டு வந்திருந்தனர். இது குறித்து அந்த இயக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன், திருமாறன், மூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் மதுவின் விளைவை சொல்லவே மண்டை ஓடு எடுத்து வந்தோம். 

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கோள்களின் நிலையை கண்டறிந்தவர்கள் நாம்; ஆளுநர் ரவி

சாதாரண கூலித் தொழிலாளி மது அருந்துவதால் வருமானத்தை முறையாக வீட்டில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. பூரண மதுவிலக்கு  அமல்படுத்தாமல் காந்தி பிறந்த நாளில் மாலை அணிவித்து கொண்டாடுவதில் என்ன பலன்? கொரோனாவுக்கு முன் மக்கள் மதுவுக்கு எதிராக தீவிரமாக போராடினார்கள். இந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் அரசு கண்டு கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன் மதுவை எடுத்து விடுவோம் என்று கூறி விட்டு தற்போது அரசு இதை பற்றி பேசுவதில்லை. 

நெல்லை மதுபோதையில் தகராறு செய்த ஊர்காவல் படை வீரர் இடை நீக்கம்

இளைஞர்கள், மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் கொலை, கொள்ளை கற்பழிப்பு நடக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி மக்கள் வலியுறுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். மது விலக்கு இருந்தால் தான் ஓட்டு போடுவோம் என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும். மக்கள் ஒரு எழுச்சியாக இதை வலியுறுத்தி மதுக்கடைகளை அடைத்து பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமென செயல்பட்டு வருகிறோம்.

மதுவிலக்கு இல்லாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இந்து, இஸ்லாமியர் போன்று ஆல்ஹகாலிக் என்ற ஒரு புது சமுதாயம் உருவாகும். அதில் இளைஞர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios