முந்தி செல்ல வழிவிடாததால் ஆத்திரம்.. அரசு பேருந்து ஓட்டுநருக்கு வெட்டு.. கண்ணாடி உடைத்து ஆபாசமாக பேசியவர் கைது

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த இனோவா காரின்  ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழிவிட முடியவில்லை. 

Government bus driver Attack.. car driver Arrest

மதுரையில் சாலையில் முந்தி செல்ல வழி விடாத அரசு பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கி, ஆபாச வார்த்தையால் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த இனோவா காரின்  ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழிவிட முடியவில்லை. 

இதையும் படிங்க;- Jai Bhim: சூர்யாவுக்கு எதிர் சாட்சியாக மாறிப்போன ராஜாகண்ணு மனைவி.. ஜெய்பீமில் பணியாற்றியவரும் விட்னஸ்..!

Government bus driver Attack.. car driver Arrest

இதனால், ஆத்திரமடைந்த இனோவா கார் ஓட்டுநர், அரசுப்பேருந்தை முந்திச்சென்று மறித்து நிறுத்தியிருக்கிறார். இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய கார் ஓட்டுநர், பேருந்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பின்பு ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி பேருந்து ஓட்டுநரை கல்லாலும், இரும்பு கம்பியாலும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணனின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையும் படிங்க;- மகன் வயசு பையனுடன் உல்லாசம்.. எச்சரித்த கணவர்.. 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது ஆண்டி..!

Government bus driver Attack.. car driver Arrest

இதையும் படிங்க;- சிறார்களுடன் ஓரல் செக்ஸ் பெரிய குற்றமல்ல... போச்சோ வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு.!

இதனால் பேருந்திலிருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். அரசுப்பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து, அங்கு விரைந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தாக்குதல் நடத்திய வாகனத்தில் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அதையடுத்து, தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி ஆய்வு செய்து  தாக்குதல் நடத்திய ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான  வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios