சிறுவன் கடத்தல் விவகாரம்; பெண்ணின் தற்கொலை கடிதத்தால் திடீர் திருப்பம்
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனையின் தற்கொலைக் கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவருடைய 14 வயது மகன் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் பொழுது மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். மேலும் மைதிலி ராஜலட்சுமியை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ரூ.2 கோடி கொடுத்தால் மட்டுமே சிறுவனை விடுவிப்போம். இல்லையென்றால் சிறுவனை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு கடத்தல் காரர்களை துரத்தத் தொடங்கினர்.
சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
காவல் துறையினர் தங்களை பின்தொடர்வதை அறிந்த கும்பல் சிறுவனை சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. சிறுவன் மீட்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய 4 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜா மற்றும் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா ஆகிய இருவரை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டினர்.
சூர்யா குஜராத் சென்ற நிலையில், காவல் துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்து குஜராத்தில் ஐஏஎஸ் குடியிருப்பில் வீட்டின் பின்புறம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சூர்யா எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் காவல் துறை வசம் கிடைத்துள்ளது. அதில், “பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை அளித்துள்ளார்.
இது தனது கணவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந் தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.