ரயில் பயணிகளின் கவனத்திற்கு; சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 55 ரயில்கள் ரத்து, சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும், குறைவான செலவில் இலக்கை சென்று சேர்வதற்கும் எளிய மக்களின் ஒரே தேர்வாக இருப்பது மின்சார ரயில்கள் மட்டுமே. இந்நிலையில் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.30, 9.56, 10.56, 11.40, நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு பதிலாக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மற்றும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே போன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரம் - கடற்கரை இடையே காலை 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40 நண்பகல் 12.05, 12.35, மதியம் 1.00, 1.30, மற்றும் இரவு 11.40 மணிக்கு இக்கப்படும் ரத்து செய்யப்படுகின்றன.
இவற்றுக்கு மாற்றாக பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.20, 12.40, மதியம் 1.00, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, நள்ளிரவு 12.20, 12.45 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர தடை இல்லை; மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவை வழங்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.