பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன்; ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கூடுதல் பொறுப்பு!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்டராங்கின் மனைவி பொற்கொடி ஒருங்கிணைப்பாளராக நியமனம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது வரை பாஜக, அதிமுக, திமுக என பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
வழக்கை சிபிஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் மாநில காவல் துறையே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரா இருந்தாலும் நிச்சயம் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் நேரில் உறுதி அளித்தார்.
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர தடை இல்லை; மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியையே மீண்டும் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூருக்கு சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்
இந்நிலையில், கட்சியின் புதிய மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலத் தலைவரைக் காட்டிலும் மாநில ஒருங்கிணைப்பாளருக்கே கூடுதல் பொறுப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் பேகன்ஜி மாயாவதி அவர்கரின் வரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் திரு அசோக்சித்தார்த் மற்றும் திரு கோபிநாத் தலைமையில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும், மாநில தலைவராக திரு பி.ஆனந்தன் அவர்களையும், மாநில துணைத்தலைவராக டி.இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாராக திரு கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.