கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் தந்தை, மகள் உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சூளை ஜிகேஆர் நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 40). இவர் ஈரோட்டில் இருந்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 3.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கார் முற்றிலும் உருகுலைந்து. கார் மோதிய வேகத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார், அவரது மகள் வருணா, மாமியார் இந்திராணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

KAILASA's Nithyananda Location Revealed: நாட்டிற்கே தண்ணீர் காட்டிய நித்தி; கைலாசா இருக்கும் இடத்தை அறிவித்தார்

மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரின் மகன் சுதர்சன், மனைவி மோகனா ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமாரின் உடல் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது.

எனது மொபைலில் இருந்த ஆடியோ வெளியானது இப்படி தான்.? இவர்கள் தான் காரணம்-சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஷாக் 

கோவிலுக்கு சென்று திரும்பிய நபர்கள் சாலை விபதில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.