எனது மொபைலில் இருந்த ஆடியோ வெளியானது இப்படி தான்.? இவர்கள் தான் காரணம்-சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஷாக் தகவல்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வாட்ஸ் ஆப் ஆடியோவில் சீமான் உள்ளிட்டவர்களிடம் பேசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தனது ஆடியோ எப்படி வெளியானது இதற்கு யாரெல்லாம் காரணம் என சாட்டை துரைமுருகன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சாட்டை துரைமுருகன் ஆடியோ வெளியீடு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது கட்சி நிர்வாகிகள், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்த வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜை பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா அடுத்தடுத்து வெளியிட்டார். இதில் பல ரகசிய தகவல்களும் வெளியானது. இதனால் சாட்டை துரைமுருகனோடு பேசிய தலைவர்கள் முக்கிய நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாட்டை துரைமுருகன் மொபைல் போன் திருட்டா.?
இந்த சூழ்நிலையில் சாட்டை துரைமுருகன் மொபைல் போனில் இருந்த ஆடியோ எப்படி திருச்சி சூர்யா உள்ளிட்ட நபர்களுக்கு சென்றது என்பது தொடர்பான கேள்வி எழுந்தது. சாட்டை துரைமுருகன் மொபைல் போன் திருடப்பட்டதா.? அல்லது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தனது மொபைல் போனில் இருந்த ஆடியோ வெளியானது தொடர்பான தகவலை சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
சாட்டை துரைமுருகனை கைது செய்த போலீஸ்
என்னை கைது செய்யப்பட்ட போது ஒரு அதிகாரியிடம் எனது செல்போன் போகிறது. அந்த செல்போனில் சீமானுடன் பேசியது, எனது நண்பர்களோடு பேசியது என அனைத்தையும் எடுத்து வைத்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன.? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊழல் வழக்கு, பொதைப்பொருள் வழக்கு, கொலையில் சம்பந்தம் தொடர்பாக இருந்தால் அது தொடர்பான ஆடியோக்களை வீடியோக்களை செக் செய்து பார்க்கலாம். அதனை வெளியில் வெளியிட கூடாது. நீதிமன்றத்தில் தான் சமர்பிக்க முடியும்,
மொபைல் போனை கைப்பற்றிய போலீஸ்
ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நான் பேசியதாக கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கிற்கும் எனது செல்போனுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். எனது போனை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டனர். காவல்துறையினர் எனது ஆதார் கார்டு எடுக்க வேண்டும் என சொன்னார்கள். இதனை நம்பி பாஸ்வேர்டு போட்டேன். எனது பாஸ்வேர்டை அப்படியே போட்டு மொபைல் போனில் இருந்து ரெக்கவரி சாப்ட் வேர் போட்டு பழைய தகவல்களை எடுத்துள்ளார்கள்.
திமுக ஐடி விங்கிற்கு கொடுத்த எஸ்பி
குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தான் வாய்ஸ் மெசேஜ் அழிப்பார்கள், எந்த குற்றசம்பவங்களிலும் ஈடுபடாத எனது போனை எடுத்து அதில் உள்ள தகவல்களை திமுக ஐடி விங் கொடுத்துள்ளார்கள். காவல் ஆய்வாளர் எனது தகவல்களை போனில் இருந்து எடுக்கிறார். அந்த தகவல் டிஎஸ்பிக்கு செல்கிறது. டிஎஸ்பி -எஸ்பிக்கு கொடுக்கிறார். எஸ்பியிடம் இருந்து திமுகவின் ஐடி விங்கிற்கு சென்றுள்ளது என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.