கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, இது விவரிக்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பேரணியில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் 17 பெண்கள், 13 ஆண்கள் மற்றும் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். 

தற்போது மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவலின்படி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். பல குழந்தைகள் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை கரூருக்குச் சென்று மருத்துவமனையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக தமிளகா அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அதிகாலை 3.25 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கரூர் சம்பவம் அரசியல் கூட்டங்களில் இதுவரை நடந்த நிகழ்வுகளில் இல்லாத துயரம் என்றும், விவரிக்க முடியாத சம்பவம் என்றும் தெரிவித்தார். விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, யாரை கைது செய்யலாம், யாரை முடியாது என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.

15 வயதுக்குட்பட்ட சுமார் ஆயிரம் குழந்தைகள் கரூர் பேரணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நேரம், காவல்துறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், விபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் விஜய் மைக்கில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் உதவியை கோரினார்.

இருப்பினும், கூட்ட நெரிசல் காரணமாக உதவி வழங்க முடியவில்லை. கரூர் சம்பவத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். 

பிரதமர் மோடி கரூர் விபத்தை வேதனையளிக்கும் சம்பவமாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அன்புடன் துணை நிற்கும் என்றும் கூறினார். அமித் ஷா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து தனது இரங்கலைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.